டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த இணையதளமானது அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கம் ஆகும். அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது.
என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும்.
முதல் 60 நாட்கள் இலவசம். நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.
எனக்கு திருமணம் ஆகி 13,15 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள். விவாகரத்துக்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை.
எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூதர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கபட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
அதனால் கிறிஸ்தவ ஆண் நண்பர் அல்லது காதலன் தேவை என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த 6-ந் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!