ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள நான் ரெடி – ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது ரசிகர் ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று நடிகையிடம் கேலியாக கேட்டார்.

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

ஷெர்லின் ஷோப்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கி செல்பி எடுத்தும் மகிழ்விக்கிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டார். இந்த கேள்விக்கு ஷெர்லின் சாதகமாக பதிலளித்து ஒரு நிபந்தனையை வைத்தார். ஷெர்லின் சோப்ராவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!