மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 வயதே ஆகும் அரவிந்த் சேகர் உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் சுருதி சண்முக பிரியா.
இந்த சீரியலை தொடர்ந்து கல்யாணப்பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சுருதி கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில் நேற்று சுருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதே ஆகும் அரவிந்த் சேகர் உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரே வருடத்தில் காதல் கணவரை பறிகொடுத்துவிட்டு, நிற்கும் சுருதிக்கு ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து ஆறுதல் கூறி வரும் நிலையில், தன்னுடைய கணவர் மரணம் குறித்து தற்போது சுருதி அழகிய காதல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
இந்த பதிவில், அவர் கூறியுள்ளதாவது… “பிரிந்தது உடல் தான், ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து கொண்டு, இப்போதும்… எப்போதும் என்னை பாதுகாக்கிறது என் காதலே அரவிந்த்.
உங்கள் மீதான என் அன்பு இப்போது, மேலும் மேலும் அதிகரித்துள்ளது. நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நல்ல நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் செய்கிறேன்.
மேலும் உன்னை அதிகம் நேசிக்கிறேன் அரவிந்த். என் அருகில் நீங்கள் இருப்பதை உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலர் சுருதிக்கு தைரியமாக இருக்கும்படி, தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!