தகாத உறவால் பிறந்த குழந்தையை மூச்சு திணறவைத்து கொடூரமாக கொன்ற பெண்!

கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் ஜூலி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலிக்கு வேறொருடருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் ஜூலி கர்ப்பமானார்.

கணவர் இறந்து 12 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கள்ளக்காதலனால் தான் கர்ப்பமானதை, கள்ளக்காதலை போன்று ஜூலி யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். நாட்கள் செல்லச்செல்ல அவரது வயிறு பெரிதாக தொடங்கியது.

அதன்பிறகும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதித்தபடி இருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார்.

ஆகவே அவர் அந்த குழந்தையை கொலை செய்து புதைத்துவிட திட்டமிட்டார். அதன்படி அங்குள்ள கடற்கரைக்கு பிறந்த குழந்தையை எடுத்துச்சென்றிருக்கிறார். அங்கு குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்தார்.

குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேளே இந்த கொடூர செயலில் ஜூலி ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.


இந்நிலையில் கடற்கரையில் ஜூலி புதைத்த குழந்தையின் உடல் வெளியே வந்துவிட்டது. நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியபடி இருந்தன.

இதனைப்பார்த்த சிலர் குழந்தை பிணம் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை மூச்சை திணறடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையை கொன்றது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தான், ஜூலிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை போலீ சார் கண்டறிந்தனர். இதை யடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர் தனக்கு குழந்தையே பிறக்க வில்லை, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஜூலி வீடு உள்ள பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூலி கர்ப்பமாக இருந்ததும், அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது.

அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தெரிவித்து ஜூலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கு குழந்ைதை பிறந்ததையும், அதனை மூச்சு திணறடித்து கொன்று கடற்கரையில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஜூலியை போலீசார் கைது செய்தனர். கணவர் இறந்து விதவை யாக வாழ்ந்து வந்தநிலையில், கள்ளக்காதலன் மூலம் கருவுற்று குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தன்னை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பமானதையும், குழந்தை பெற்றதையும் மறைத்துவிட்டதாகவும், பெற்ற குழந்தையை பிறந்த சிறிது நேரத்தி லேயே கொன்று புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் ஜூலி தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்காதலன் மூலம் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கொடுரமாக கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!