நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம்.
நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி.
தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் டையை பயன்படுத்தி வருவதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் உங்கள் கூந்தலை கருமையாக்க முடியும்.
* அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.
* மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தலை குளிக்கும் முதல் நாள் இரவே உங்கள் முடிக்கு தகுந்தார் போல் மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும்.
சுமார் 6 மணி நேரமாவது இந்த மருதாணி பொடியானது ஊற வேண்டும். பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்த மருதாணி பொடியை நன்றாக தலைமுடியில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தலைமுடியை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்த வேண்டும். ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.
தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன் அவுரி பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உடனடியாக தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் சீயக்காய் போன்று ஏதும் தேய்க்காமல் அப்படியே தலையை நன்றாக அலசி விட வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நரைமுடி விரைவில் முழுமையாக கருமுடியாக மாறிவிடும். முதல் முறை பயன்படுத்தினாலே வித்தியாசம் நன்றாகத் தெரியும்.
அவுரி பொடியை தண்ணீரில் கலந்து ஊற வைத்து விட்டால் அதன் தன்மை மாறக்கூடும் எனவே பொடியை தண்ணீரில் கலந்தவுடன் தேய்க்க வேண்டும். மருதாணி மற்றும் அவுரி இலைகளை வெயிலில் காய வைக்க கூடாது. நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.
மேலே கூறிய முறைகளை சரியாக செய்தாலே உங்கள் இளநரைக்கு விரைவில் தீர்வு கிட்டும்.
* தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1,
டீ தூள் – இரண்டு ஸ்பூன்,
அவுரி இலை பொடி – 2 ஸ்பூன்.
இரண்டு ஸ்பூன் டீ தூளுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, டீ டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு டீ டிக்காஷன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் 2 ஸ்பூன் அவுரி இலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதன் நிறம் மாறி சற்று பிரவுன் கலராக மாற ஆரம்பிக்கும்.
பயன்படுத்தும் முறை: இதனை பயன்படுத்தும் பொழுது முடியில் எண்ணெய் இருக்கக்கூடாது. முதல் நாளே தலைக்கு குளித்து எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.
அவுரி இலை பொடி நேரடியாக வெள்ளை முடியில் கருமை நிறத்தைக் கொண்டு வராது. எனவே இந்த பீட்ரூட்டின் சிவப்பு நிறத்தால் முடி சிறிதளவு பிரவுன் நிறமாக மாறும்.
அதன் பின்னரே அவுரி இலையின் தன்மை முடியுடன் சேர்ந்து கருமை நிறமாக மாற ஆரம்பிக்கும். சுத்தமான தலைமுடியில் இந்த அவுரி இலை பேஸ்டடை நன்றாக தடவி விட்டு 1 அல்லது 2 மணி நேரங்கள் அப்படியே ஊற வைத்து, சாதாரண நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அல்லது சீயக்காய் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அப்படி ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முடியின் நிறம் கருமையாக மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!