காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம்.
சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.
என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது.
காபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.
தினமும் இதை செய்து வந்தால் படிப்படியாக முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் காணலாம். ஒரு டீஸ்பூன் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள்.
பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.
கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் 10 – 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 – 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல் நீங்கி முகம் பொலிவு பெறும்.
கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையை நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!