உலர் திராட்சையை குழந்தைகளுக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.


உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.

காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!