மாதவிலக்கின் போது வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறுவது எதை உணர்த்துகிறது?

மாதம்தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் பெண்களில் உடலில் சோர்வு, டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை வலி, கால் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் சிலருக்கு வாந்தி, செரிமானக் கோளாறு போன்றவைகளும் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தத்தின் நிறத்தை வைத்தே பெண்களில் உடல் ஆரோக்கியத்தைக் கூறலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்… ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான்.

பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம். கட்டிகள் சிறிதாக இருந்தால் பாதிப்பில்லை.

பெரிய பெரிய கட்டிகளாக இருந்தால் அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல.

அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம். கிரே கலந்த சிவப்பு நிறம் அதிகமாக ஏற்படாது. ஒருவேளை அப்படி வந்தால் அது ஏற்கனவே உடலில் தேங்கியிருந்த பழைய இரத்தமாக இருக்கும்.

அப்படி இல்லையென்றால் பாலியல் தொற்று இருந்தால் இந்த நிறத்தில் வரும். மேலும் நீங்கள் கர்பமாக இருந்தால் இந்த நிறத்தில் வரும் அல்லது கரு கலைந்து விட்டாலும் இந்த நிறத்தில் வரும்.

இந்த நிறத்தில் மாதவிடாய் வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் போது சிவப்பு கலந்த பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும்.

உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் தான் பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மேலும் ஒருசிலருக்கு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த நிறத்தில் வெளியேறும்.

மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!