ஷேன் வார்னே கொரோனா தடுப்பூசியால் மரணம்..? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வார்னே. இவர் சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவர். இவர் மார்ச் 4,2022ல் தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த திடீர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பெரும் பரபரப்புக்குள்ளானது.

அதில் ஷேன் வார்னே மரணம் கொரோனா தடுப்பூசியான எம்.ஆர்.என்.ஏவுடன் தொடர்புடையது என இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி இதய நோய் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ சங்கத்தின் தலைவர் கிறிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா இருவரும் ஷேன் வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு இதய நோய் இருந்தது கண்டறியப்பட்டது.

அத்துடன் கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியானது அவர்களின் உடல்நிலையில் விரைவாக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். சர்வதேச முன்னாள் விளையாட்டு வீரரான ஷேன் வார்னே 52 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை ரசிகர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

சமீபகாலமாக ஷேன் வார்னேவின் உடல் எடை அதிகரித்திருந்தது.அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கமும் சேர்ந்து கொண்டது . இதனால் அவருக்கு கோவிட் தடுப்பூசி பெரும் சவாலாக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அவரது இதய தமனிகளில் லேசான பாதிப்புகள் இருந்தன. எனினும் கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதும் அவரது உடல்நிலை வேகமாக முன்னேற்றம் கண்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் அதிகப்படியான மரணங்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். இந்த மருந்தின் பயன்பாடு உலகமெங்கும் நிறுத்தப்பட வேண்டும்.

சிகிச்சை பெற வரும் பல நோயாளிகள், எங்கள் தந்தை ஃபைசரின் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை 2 டோஸ் செலுத்திய சில மாதங்களில் இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசிகள் இதயத்தை மோசமான முறையில் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஷேன் வார்னேவின் நண்பரும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான திமிட்ரி மாஸ்கரேன்ஹாஸ் ” நான் எனது நல்ல நண்பனை இழந்துவிட்டேன்.

அவருடைய மரணத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் என நினைக்கையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவர் கொரோனா தடுப்பூசி போடாதிருந்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

எப்போதுமே அடுத்தவர்கள் காயமடையவோ பாதிப்படையவோ ஷேன் வார்னே விட மாட்டார். எனவே மருத்துவர்களின் இந்த ஆய்வை ஏற்று இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் உடனடியாக நிறுத்த நான் ஆதரவு அளிப்பேன் ” எனக் கூறியுள்ளார்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!