ஜிம்பாப்வேயில் அறைகள் இல்லாமல் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்!

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒட்டலில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால், தரையில் அமர்ந்துள்ளனர்.

உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடர் வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது. இதில் விளையாட ஏழு அணிகள் நேரடி தகுதிபெற்றுவிட்டன.

ஆனால் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலகக்கோப்பையில் களமிறங்க முடியும்.

அந்த வகையில் ஜூன் 18ஆம் தேதி ஜிம்பாப்வேயில் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷனகா தலைமையிலான இந்த அணியில், ஐபிஎல்லில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா இடம்பெற்றுள்ளார்.

தற்போது 15 பேர் கொண்ட இலங்கை அணி ஜிம்ப்பாப்வே சென்று உள்ளது. ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒட்டலில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால், தரையில் அமர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை இலங்கை கிரிக்கெட் வீரர் மஹிஷ் தீக்ஷனா தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேறொரு நாட்டு கிரிக்கெட் அணி ஓட்டலில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!