எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்… தயாரிப்பாளர் போனி கபூர்.!

உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் நானி நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீசான ‘தசரா’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டுக்களை குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக தமிழில் இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ படம் வெளியாகயிருக்கிறது.


தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தனது படங்களின் வாயிலாக அழுத்தமான அரசியலையும் முன் வைத்து வருகிறார். இவரின் அடுத்த படைப்பாக ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகவும் இந்தப்படம் தயாராகி வருகிறது.

‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வடிவேலுவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினருடன் கமல், வெற்றிமாறன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், எஸ்.ஜே. சூர்யா, சிவகார்த்திகேயன், கே.எஸ். ரவிகுமார், விஜய் ஆண்டனி, கவின், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என்னை பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும், ‘மாமன்னன்’ படம் குறித்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷ், இந்தப்படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். பொதுவான ஒரு விஷயத்தை பற்றி படத்தில் பேசியுள்ளோம். உதயநிதி, வடிவேலுடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. ஆனால் படம் அப்படி இருக்காது. சீரியஸான படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!