நடிகை லாவண்யா – வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம்!

தமிழில் சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி தொடர்ந்து மாயவன் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது தணல் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

லாவண்யா திரிபாதியும், தெலுங்கு இளம் கதாநாயகன் வருண் தேஜூம் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் அந்தாரிக் ஷம் படத்தில் சேர்ந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த வாரம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெலுங்கு திரையுலகில் தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள அவர்களின் வீடு அல்லது ஓட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நாகபாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்படத்தக்கது.

சமீபத்தில் நாகபாபுவிடம் இதுகுறித்து கேட்டபோது, “திருமண விஷயத்தை வருண்தேஜ் அறிவிப்பார், மணமகள் யார் என்பதையும் அவரே தெரிவிப்பார். திருமணம் முடிந்ததும் வருண் தேஜ் வேறு வீட்டிக்கு சென்று விடுவார்.

நாங்கள் தனியாக இருப்போம். எனது மகன் மனைவியோடு தனியாக வசிக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்” என்றார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!