திடீரென மாயமான ஷீரடி சாய்பாபா சிலை- பக்தர்கள் பரவசம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒரு குடிசைக்குள் சாய்பாபா சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. கருவறையில் 8 அடி உயரத்தில் பளிங்கு கல்லால் ஆன ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் சிலர் கேமிரா, செல்போனில் சாய்பாபா சிலையை போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது செல்போன், வீடியோவில் கருவறையில் இருந்த 8 அடி உயர ஷீரடி சாய்பாபா சிலை மறைந்து இருந்தது.

ஆனால் சாய்பாபா கழுத்தில் இருந்த மாலை மட்டும் தனியாக பதிவாகி இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் போட்டோ, வீடியோ எடுத்த போது சாய்பாபா சிலை பதிவாகி இருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!