பெரும்பாலானவர்களுக்கு அவர்களது கைகள் மற்றும் கால்களின் முட்டிகளில் சொரசொரப்பாகவும் கருமையாகவும் சருமம் மாறியிருக்கும். இந்த கருமையை வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாகப் போக்கிவிடலாம்.
நாம் முறையாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது. சூரிய ஒளியின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக, தோலின் நிறம் கருமையாக மாற தொடங்குகிறது.
அதாவது ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னை ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், உடலின் சில பாகங்களின் நிறம் மாறுகிறது. சில நேரங்களில் பயன்படுத்தும் பொருளின் விளைவு காரணமாக தோலின் நிறம் கருமையாகிறது.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்
எள்ளு பவுடர் – சிறிதளவு
ஆலிவ் ஆயில் – 1-2 டீஸ்பூன்
இவை மூன்றையும் பேஸ்ட் போல் நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கை மற்றும் காலின் முட்டி பகுதியில் தடவி நன்றாக தேய்க்கவும்.
இதனால் அது சருமத்தில் உறிஞ்சப்படும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மாறத்தொடங்கும். முகத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதியையும் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் சுத்தமாக காட்சியளிக்கும். ஓட்ஸை மிக்ஸியில் நைஸாக அரைத்து வீட்டிலேயே ஸ்க்ரப் செய்யலாம். முகத்துடன், முழங்கைகளையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும்.
இதற்கு மாய்ஸ்சரைசர் க்ரீம் அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் போதெல்லாம், கை மற்றும் கால்களின் முட்டி பகுதியை நன்றாக தேய்த்து குளிக்கவும். இதனால் அவை சுத்தமாக இருக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!