60 வயதில் 2-வது திருமணம் செய்த ‘ கில்லி ‘ பட வில்லன் ‘

பிரபல நடிகராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, தில், தமிழன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினர் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!