4,500 ஆண்டுகளுக்கு முன்பே முத்தமிட தொடங்கிய மக்கள்…?

உலகில் 3,500 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் முதன்முதலாக மனிதர்கள் முத்தமிட்டனர் என்பதே இதுவரை கிடைத்த சான்றுகளில் இருந்து அறியப்பட்டு வந்தது.

உலகில் காதலை பரிமாறி கொள்ளும் உணர்வுப்பூர்வ முறைகளில் ஒன்றாக முத்தம் அறியப்படுகிறது.

இது காதலர்கள் மட்டுமின்றி, தம்பதிகள், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கன்னத்தில் அளிக்கும் முத்தம், வயதில் மூத்தவர்களுக்கு அல்லது மதிப்பு வாய்ந்தவர்களுக்கு அவர்களின் மதிப்பை வெளிப்படுத்த, புறங்கையில் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல முத்தங்களை பற்றி நாம் அறிந்திருப்போம்.

கன்னம், கைகளில் முத்தமிடுதல் தவிர்த்து, மூக்கோடு மூக்கை உரசி அன்பை வெளிப்படுத்துபவர்களும் உலகில் உள்ளனர். காதலர்களுக்கு இடையேயான இந்த முத்தத்தில் சைவம், அசைவம் என்றெல்லாம் கவிஞர்களும் கூட வர்ணித்து உள்ளனர்.

உடலில் அதிக உணர்வுள்ள பகுதியாக உதடு உள்ளது. எனினும், பொதுவாக நாம் உதட்டை மறைக்கும் வகையில் ஆடை அணிவதில்லை. எனினும், அன்பை வெளிப்படுத்தும் பகுதியாகவும் அது உள்ளது. இதனால் உதட்டுடனான முத்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழக குழுவினர் கூறும்போது, மெசபடோமிய சமூகத்தினர் இடையே முதலில் இந்த உதட்டுடன் கொடுக்கப்படும், முத்தமிடும் பழக்கம் நடந்திருக்கும் என கூறுகின்றனர். இது பல்வேறு கலாசாரங்களிலும் கூட பரவியிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதனால், ஆசியாவின் சில குறிப்பிட்ட பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முன் மனித முத்தம் பதிவானது என்ற கொள்கைக்கு இது முரண்பாடாக அமைகிறது.

ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் முத்தம் இரண்டு வகைப்படும் என வேறுபடுத்தி உள்ளனர். அவற்றில் ஒன்று, நட்பு சார்ந்த மற்றும் பெற்றோர் வகையை சார்ந்த முத்தம்.

மற்றொன்று, காதல் உணர்வுடன் மற்றும் பாலியல் இச்சையுடன் கூடிய முத்தம் என இரு வகைகளாக பிரிக்கின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!