பாலிவுட் இளம் நடிகர் கழிவறையில் பிணமாக மீட்பு!

இந்தி நடிகரும், மாடலுமான ஆதித்ய சிங் ராஜ்புத் (33) மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் வசித்து வந்தார்.

நடிகர் ஆதித்ய சிங் ஆதி கிங், மாம் அன்ட் டாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜ்புத்னா, கோட்ரெட், ஏ ஹே யாஷிகி உள்ளிட்ட டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் நடிகரை தேடி நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றார்.

வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது குளியலறையில் நடிகர் ஆதித்ய சிங் மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

உடனடியாக நண்பர், கட்டிட காவலாளி உதவியுடன் நடிகரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நடிகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

நடிகரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!