சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்!

பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் அல்லது பின், அதாவது 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானதாகும்.

அவ்வாறில்லாமல், கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டால் அது சீரற்ற மாதவிடாயாகக் கருதப்படும்.

சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்

மாதவிடாய் ஏற்படும் காலம் ஒரே சீராக இல்லாமல் ஒவ்வொரு முறையும் நீண்ட நாள்கணக்கு வித்தியாசத்தில் முன்பாகவோ பின்பாகவோ ஏற்படுதல். 21 நாட்களுக்கு முன்பாகவோ 35 நாட்களுக்குப் பின்னரோ மாதவிடாய் ஏற்படுதல்.

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருத்தல். வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு ஏற்படுதல்

சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

ஹார்மோன் கோளாறுகள்

தைராய்டு இயக்கம் சீராக இல்லாமை

சினைப்பை நோய்க்குறி (PCOS)

கர்ப்பப்பை கோளாறுகள்

அதீத உடற்பயிற்சி

சத்தான ஆகாரம் உண்ணாமை

அதிக அல்லது குறைவான உடல் எடை

மன அழுத்தம்

மாதவிலக்கு நிற்கும் காலம் (menopause)

சில வகையான மருந்துகள்

சில உடல் நலக் கோளாறுகள்

நாற்பது வயதுக்கு மேல், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரம், சீரற்ற முறையில் தான் மாதவிடாய் ஏற்படும்.

பர்த் கண்ட்ரோல் பில்ஸ் என்று கூறப்படும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தினாலும், IUD என்ற கருத்தடைகள் சாதனங்களைப் பயன்படுத்தினாலும், மாதவிடாய் சுழற்சி முறையற்று காணப்படும்.

பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOS), ஃபைப்ராய்ட்ஸ், பெல்விக் பாதிப்பு, என்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட சினைப்பை பிரச்சனைகள் மாதா மாதம் கருமுட்டை உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும். அதிகப்படியான ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பு ஆகிய வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!