கோடை காலத்தில் குளிர்ச்சியை அநுபவிக்க என்ன செய்ய வேண்டும்..?

கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பத் தாக்கம் வீட்டின் உள்ளேயும் வெளிப்படும். அப்போது மின் விசிறியை உபயோகித்தாலும் அனல் காற்றுதான் அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும்.

வீட்டில் ‘எக்ஸாஸ்ட் பேன்’ இருந்தால் அதை உபயோகப்படுத்துவது நல்லது. பெரும்பாலும் சமையல் அறையில்தான் ‘எக்ஸாஸ்ட் பேன்’ பயன்பாட்டில் இருக்கும். சமையல் முடிந்ததும் அதனை அணைத்துவிடாமல் சில மணி நேரங்கள் ஓட விடுவது வீட்டில் இருக்கும் வெப்பம் சூழ்ந்த காற்றை வெளியேற்ற உதவும்.

அதனால் அறைக்குள்ளும் வெப்பத்தாக்கம் குறையும். கோடை காலத்தில் ‘டேபிள் பேன்’ பயன்படுத்துவது நல்லது. அது அதிக அளவில் வெப்ப காற்றை வெளியேற்றாது. அதன் முன்பு அகன்ற பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை கொட்டி வைக்கலாம். டேபிள் பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸ்கட்டிகளில் பரவி அறையில் குளிர்ந்த காற்றை வீசச்செய்யும்.


கோடை காலத்தில் சிந்தடிக், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன திரைச்சீலைகளை பயன்படுத்தினால் அது அதிக வெப்பத்தை உமிழும். திரைச்சீலைகள் மட்டுமின்றி சோபா கவர், மெத்தை, தலையணை உறை போன்றவற்றுக்கும் காட்டன் துணிகளை பயன்படுத்தவேண்டும்.

மின் சாதனங்களும் வெப்பத்தை உமிழக்கூடியவை என்பதால் கோடை காலத்தில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பகல்வேளையிலும், இரவு வேளையிலும் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

வீட்டில் கணினி இருந்தால் அதனை உபயோகித்து முடித்ததும் அணைத்துவிட வேண்டும். பிரிட்ஜும் வெப்பத்தை உமிழும் என்பதால் அதில் அதிக பொருட்களை சேமித்துவைக்கக்கூடாது.

அவை அதன் செயல்பாட்டை அதிகரிக்க செய்து அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது.

அவையும் வெப்பத்தை கடத்தும். வீட்டை சுற்றி காலி இடம் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வளர்க்கலாம். அவை வீட்டுக்குள் குளிர்ச்சி தன்மை நிலவ உதவும். அறைக்குள் ஆங்காங்கே கண்ணாடி டம்ளர்கள், குவளைகளில் கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை தென்படும்.

வீட்டின் மொட்டை மாடி தரைத்தளத்தில் மாலை வேளையில் தண்ணீர் தெளித்தால், இரவு வேளையில் சீலிங் வழியாக வெப்பம் கீழே வருவது தடுக்கப்படும்.

அடிக்கடி தரைத்தளத்தை ‘மாப்’ போட்டு துடைத்து வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. அறைகளுக்குள் காற்று விசாலமாக புகும்விதத்தில் வீட்டை வடிவமைத்து கட்டுவது மிக அவசியம்.- News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!