சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது.
பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதில் இருந்து பல மாற்றங்களை செய்து வந்த அவர், அதன் தலைவராகவும் (சி.இ.ஓ.,) நீடித்து வந்தார்.
பிறகு, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் கிடைத்த முடிவை தொடர்ந்து, பதவியில் இருந்து விலகினார். ஆனால், புதிய தலைவரை நியமிக்கவில்லை.
டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது: ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓ.,வை தேர்வு செய்துள்ளேன். அவர் அடுத்த 6 வாரத்தில் பணியை துவங்குவார். நான், தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கவனிக்க உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தநிலையில்,டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்ரினோவை நியமனம் செய்தார் எலான் மஸ்க். டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சி என எலான மஸ்க் கூறியுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!