மாய்ஸ்சுரைசரை கட்டாயம் ஏன் பாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும்..?

தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை.

இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது.

சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும். குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும்.


இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.

பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!