மாதவிடாய் நாட்களில் தாம்பத்தியம் வச்சிக்கலாமா?

மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு.

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும்.

ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர். மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள். அந்த 3 நாள்களில் உடலுறவு கொண்டால் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

hகால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.

எனினும், “மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!