வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட் – ஒரே அக்கவுண்ட்-ஐ 4 போன்களில் பயன்படுத்தலாம்!

வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை இரண்டாவதாக மற்றொரு சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது.

முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மேலும் அதிக போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம்.

அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேஞ்ச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது.

எனினும், உங்களின் பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.

விரைவில் புதிய வசதி:
தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு எளிமையாக லின்க் செய்துவிட முடியும்.

எதிர்காலத்தில் இந்த அம்சத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.

தற்போது புதிய அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!