கால்பந்து வீரர் விவாகரத்து வழக்கில் பாதி சொத்தை கேட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

உலகின் பணக்கார விளையாட்டு பிரபலங்களில் ஒருவரான அசரப் தனது 19 வயதில் 31 வயது ஸ்பானிஷ் நடிகையும் மாடலுமான ஹிபா அபோக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்படும் பில் கேட்ஸ், திருமணமான 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவியையும் விவாகரத்து செய்தார். அவர் தனது சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக வழங்கினார். அதுபோல் டாம் குரூஸ், ஜானி டெப் போன்ற ஹாலிவுட் பிரபலங்களும் விவாகரத்தால் பாதி சொத்தை இழந்தனர்.

ஆனால் திருமணம் ஆன பிறகு மனைவி சண்டை போட்டு விவாகரத்து செய்ய நேரிட்டால்.சம்பாதித்த சேமித்து வைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள் தொலைந்துவிடும் என்று முன்கூட்டியே நினைத்தவர் போல மொராக்கோ கால்பந்து வீரர் அசரப் ஹக்கிமி.

உலகின் பணக்கார விளையாட்டு பிரபலங்களில் ஒருவரான அசரப் தனது 19 வயதில் 31 வயது ஸ்பானிஷ் நடிகையும் மாடலுமான ஹிபா அபோக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 3 வயது, இளைய மகன் கடந்த ஆண்டு பிறந்தான்.

தற்போது அசரப்பிற்கு 24 வயதாகிறது ஹிபா அபோக்கிற்கு 36 வயதாகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அசரப் ஹக்கிமி மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி ஹிபா அபோக் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

மேலும், தனது கணவர் அசரப் ஹக்கிமியின் கோடிக்கணக்கான சொத்துகளில் பாதியை ஜீவனாம்சமாக கேட்டுள்ளார். கால்பந்து வீரர் அசரப் ஹக்கிமியும் தனது மனைவியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். வேண்டுமானால் தன் சொத்து முழுவதையும் அவருக்கே கொடுப்பதாக கூறினார்.

ஆனால் அசரப் ஹக்கிமியின் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டபோது நீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடிய அசரப் ஹக்கிமி, தனது தொழில் சாதனைகள், பிராண்ட் அம்பாசிடர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பரிசுத் தொகை முழுவதையும் தனது தாயாருக்கு வழங்கி உள்ளார்.

மேலும் தான் வாங்கிய கட்டிடங்கள், வீடுகள், மனைகள் அனைத்தையும் தனது தாயார் பெயரில் பதிவு செய்து வைத்து உள்ளார்.இவை தவிர போட்டி கட்டணம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 80 சதவீதத்தை தனது தாய் பாத்திமாவின் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.

இதனால் அசரப் ஹக்கீமிடம் ஒரு சென்ட் நிலம், கார், சொந்த உடைகள் கூட இல்லை என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப் தனது தாயார் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 200 கோடி ரூபாய்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!