நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள விரும்பினால் இந்த தவறுகளை செய்யாதீங்க!

புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும்.

சிலருக்கு சில நாள் வரை எரிச்சலும் அரிப்பும் ஏற்படும். எனவே, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப் போகிறீர்கள் என்றால், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் செய்யக்கூடாது என்பதையும் இங்கே பார்க்கலாம். ஒரு சிலருக்கு புருவங்கள் மிகவும் அடர்த்தியாக பெரிதாக காணப்படும்.

அவர்கள் த்ரெட்டிங் செய்தால் நிச்சயமாக சில நாட்களுக்கு புருவங்களைச் சுற்றி சிவந்து, கண்கள் லேசாக வீக்கமாகத் தான் இருக்கும். எனவே புருவம் அடர்த்தியாக இருப்பவர்கள் த்ரெட்டிங் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், அழகான மென்மையான புருவங்களைப் பெறலாம்.

நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள விரும்பினால்,மேக்கப்பை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். கண் மை, மஸ்காரா என்று எதையுமே போட்டுக்கொள்ள கூடாது.

அதேபோல திரெட்டிங் செய்த பிறகு குறைந்தது ஒரு நாளைக்காவது எந்த மேக்கப் சாதனத்தையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திரெட்டிங் செய்த சில மணி நேரத்திலேயே உங்களுக்கு ஏதேனும் க்ரீம் அல்லது கிளென்சர் பயன்படுத்த வேண்டும் என்பது போல உணர்வு தோன்றும்.

திரெட்டிங் செய்யும்போது ஃபாளிக்கில் திறக்கப்படுவதால், நீங்கள் கிளென்ஸர் அல்லது க்ரீம்கள் எதேனும் பயன்படுத்தினால் அந்த இடத்தில் புண்ணாக மாறி தழும்பாக அடையாளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவரவரின் புருவத்தின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் வடிவத்துக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட கால அளவில் திரெட்டிங் செய்வது சரியாக இருக்கும்.

ஒரு சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், ஒரு சிலருக்கு மாதம் ஒருமுறையும், மிகவும் மெல்லிசான புருவம் இருப்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திரெட்டிங் செய்தால் கூட போதுமானது.

எனவே உங்கள் முகத்திற்கு, உங்கள் புருவத்திற்கு ஏற்றவாறு எந்த கால இடைவெளியில் நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களுடைய அழகு கலை நிபுணரிடம் கேட்டு அதையே பின்பற்ற வேண்டும். இடையில் நீங்கள் சுயமாக திரெட்டிங் செய்து கொள்ள வேண்டாம்.

அவசரமாக ஓரிரு புருவ முடிகளை நீங்கள் ட்வீசரில் நீக்கினால் கூட, புருவத்தின் அழகு கெட்டுவிடும். எவ்வளவு நேர்த்தியாக, வலியே இல்லாமல் புருவம் திருத்தப்பட்டாலும், மிகக் குறைந்த அளவிலாவது வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படலாம். எனவே வீக்கம் மற்றும் சிவந்திருப்பது போன்றவற்றைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி அல்லது கற்றாலை ஜெல்லை பயன்படுத்தலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!