பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கும் நாக சைதன்யா!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றார்.

அப்போதிருந்து, படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் நாக சைதன்யாவைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. மேலும் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

சமந்தாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, நடிகர் நாகசைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாகச் செய்திகள் வெளியாகின.

மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் வானதி வேடத்தில் நடித்தவர் நடிகை ஷோபிதா. நடிகை தற்போது நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு இருவரும் ஜோடியாக லண்டனுக்கு சுற்றுலா சென்ற புகைப்படமும் வெளியானது. இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டதால், கடந்த சில மாதங்களாக இருவரையும் பற்றிய காதல் வதந்திகள் ஓய்ந்து இருந்தன.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருவரும் ஜோடியாக லண்டனில் சுற்றி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாக சைதன்யா லண்டன் சுற்றுலா சென்றபோது, அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு ஷோபிதாவுடன் உணவருந்தச் சென்றார். அங்குள்ள சமையல் கலைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவர் போட்டோவை பதிவிட்டபோது அலட்சியமாக இருந்த நெட்டிசன்கள் தற்போது அந்த புகைப்படத்தில் நடிகை சோபிதா பின்னால் அமர்ந்து இருப்பதும் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!