நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பா..? வைரலான வீடியோவால் பரபரப்பு!

நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை கான நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த மக்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை என்பது குறித்து குறிப்பிட்ட திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் கூறும்போது, பத்து தல படம் “யு/ஏ” சான்றிதழ் கொண்ட திரைப்படமாகும். சிறுவர்கள் இந்த படத்தை காண அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுடன் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அழைத்துவந்ததால், சிறுவர்களை ஊழியர் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படுவதால், பின்னர் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!