14 ஆண்டுகளாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் இளம்பெண்!

இங்கிலாந்தில் லண்டனில் வசித்து வருபவர் 30 வயது இளம்பெண் எல்லே ஆடம்ஸ் . இவர், தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

2020வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவர் அதன் பிறகு திடீரென ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறுநாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை.

பதட்டத்தில் உடல் சூடாகி விட்டது. நிறைய தண்ணீர், பழச்சாறு அருந்தலாம் என நினைத்து நிறைய நீராகாரங்களாக பருகி வந்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. மருத்துவர்களிடம் காட்டி பரிசோதித்த போது அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.

சராசரியாக ஒரு பெண்ணால் 500 மிலி சிறுநீர், ஆண்ணால் 700 மிலி சிறுநீரை அடக்கி வைக்கலாம். ஆனால் இவருடைய சிறுநீரகத்தில் ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறவில்லை.

உடனடியாக மருத்துவர்கள் டியூப் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர். ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது. தினசரி உடற்பயிற்சி, யோகா , சரியான உணவு, சரியான அளவில் தூக்கம் இருந்தால் சரியாகி விடும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.

ஆனால் இதுவரை பெண் எல்லேவுக்கு இந்த பிரச்சனை தீரவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் டியூப் கருவி மூலம் செயற்கை முறையில் தான் சிறுநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

தற்போது இயற்கையாக சிறுநீர் கழித்து 14 மாதங்கள் கடந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு Fowler’s syndrome என்ற அரிய வகை நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அரிய நோய் கொண்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது, குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த அரிய நோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட எல்லே ஆடம்ஸ் கடந்த 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சிறுநீர் நீக்கக் குழாய் சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கை திடீரென மாறிப்போனதாக கூறும் எல்லே, இந்த பிரச்சனையை தவிர மற்ற எந்த உடல் நல பிரச்சனையும் தனக்கு இல்லை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இவர் சிறுநீர் நீக்கக் குழாய் மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வருகிறார்.

இவருக்கு Sacral Nerve Stimulation என்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்கலாம். இதன் தீவிரத்தை குறைக்க முடியுமே தவிர சரிசெய்ய முடியாது.

ஆரம்ப காலத்தை விட சிகிச்சைக்குப் பின் தற்போது பரவாயில்லை என்று மனம் தளராமல் நம்பிக்கை கொண்டுள்ளார்.இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!