வீடியோ வெளியிட்ட பீகார் அமைச்சர்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், தூங்கும்போது பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி விஸ்வரூப தரிசனம் அளித்தாக ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில் தேஜ் பிரதாப் யாதவ் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை முதலில் காண முடிகிறது.

பின்னர் அவர் கனவு காண்பது போல் கண்கணை சிமிட்டுவது தெரிகிறது. அதன்பின், மகாபாரதம் சீரியலில் வருவது போல் போர்க்களத்தில் குதிரைகள் வருவது தெரிகிறது.

அத்துடன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் தெரிகிறது. உடனே தேஜ் பிரதாப் யாதவ் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் அமர்கிறார்.


கனவில் விஸ்வருப தரிசனம் கொடுத்ததாக கூறி, மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கேலி கிண்டல் செய்தவண்ணம் உள்ளனர்.

அவரது பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் நினைவுபடுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர். கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் போன்று வசனம் பேசி அவர் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர்.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், அதன்பிறகு தேஜ் பிரதாப் யாதவுக்கும் எப்படி இவ்வளவு பெரிய விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்? என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!