மெட்டா உரிமையாளர் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா..?

மெட்டா நிறுவன உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்திற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கான படித்தொகையானது ரூ.33.06 கோடியில் இருந்து ரூ.115.72 கோடியாக உயர்ந்து உள்ளது.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடம் பிடித்து உள்ளவர் மார்க் ஜுக்கர்பெர்க். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளராக ஜுக்கர்பெர்க் இருக்கிறார்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் சமீப காலங்களாக ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. செலவினங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதேபோன்று, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். செலவினங்களை குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன என அவர் கூறி உள்ளார்.

எனினும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டில் ஜுக்கர்பெர்க்குக்கு ரூ.223.17 கோடி இழப்பீட்டு தொகையாக அவருக்கு கிடைத்தது. எனினும், கடந்த ஆண்டுக்கான சம்பள தொகையாக அவருக்கு எவ்வளவு கிடைக்கும்? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதிக அளவில் ஊழியர்களின் பணி நீக்க அறிவிப்பு வெளியான நிலையில், ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு படி தொகையானது ரூ.115.72 கோடியாக இருக்கும் என அதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்திற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கான தொகையானது ரூ.33.06 கோடியில் இருந்து ரூ.115.72 கோடியாக உயர்ந்து உள்ளது இந்த சூழ்நிலையில் முறையானது மற்றும் மிக அவசியம் வாய்ந்தது என்றும் அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!