இறந்து போன தந்தைக்கு கோவில் கட்டிய பாச மகன்!

ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள், சில தந்தைகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகிப் போகிறார்கள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் தார்சியூஸ். சிறு வயதிலிருந்தே தார்சியூசுக்கு தனது தந்தை குழந்தை சாமி மீது அளவு கடந்த பாசம் இருந்து வந்துள்ளது.

தந்தை மீது வைத்த அளவுகடந்த பாசத்தினால், அவரின் மறைவுக்கு பிறகு குழந்தை சாமியின் நினைவாக அவரது விவசாய பண்ணையில் அவருக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளார். இந்த கோவிலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் திறந்து வைத்தார்.

தந்தை மீதான இவரின் பாசம் ஊர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மறைந்த தந்தைக்கு மகன் கோவில் கட்டிய சம்பவம் பரவியதையடுத்து பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இவரது தோட்டத்தில் கட்டியுள்ள தந்தையரின் கோவிலை பார்த்து செல்கின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!