50 ஆண்டுகளாக தேனீர் குடித்தே உயிர் வாழும் அதிசய பெண்!

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன், பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது. தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!