சீனாவில் உடலை தகனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது.

அந்த நாட்டில் உருமாறிய புதுவகை கொரோனாவான பிஎப்.7 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் இறக்கிறார்கள் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சூழலில் சீனாவில் தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பலியாகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர்பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இதுபற்றி சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் நாட்டில் உள்ள தகனங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் மக்ள் காத்திருப்பதைக் காணக்கூடிய ஒரு திகிலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

டுவிட்டரில் சுகாதார நிபுணர் எரிக் பீகல்-டிங் பகிர்ந்த வீடியோவில், குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடலை தகனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்து எடுத்துச் செல்லும் இதயத்தை உலுக்கும் காட்சிகளைக் காட்டுகிறது.

சுடுகாடுகளில் நீண்ட வரிசைகள் – உங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்ய காத்திருக்காமல், ஒதுக்கப்பட்ட அந்த நேரங்களுக்கு அவர்களின் இறந்த உடலை கொண்டு செபன்று செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று வீடியோவுடன் டாங் என்பவர் டுவீட் செய்துள்ளார்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தில் இருந்து கசிந்ததாகக் கூறப்படும் ஒரு ஆவணத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 24.8 கோடி மக்கள், மொத்த மக்கள் தொகையில் சுமார் 17.56 சதவீதம் பேர், டிசம்பர் 1 மற்றும் 20 க்கு இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!