அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகாத வீரர்கள்…!

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் கொச்சியில் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இது மினி ஏலம் என்ற போதிலும் ஒரு சில அணிகள் கணிசமான தொகையை ஒருசேர வெளிநாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்து மலைக்க வைத்தன.

அந்த வகையில் சாம் கார்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் ரூ.16 கோடியை தாண்டினர். இந்த ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைகு ஏலம் போன வீரர் இவர் தான். இவருக்கு அடுத்த படியாக கேமரூன் க்ரீன் 17.50 கோடி (மும்பை), பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி (சென்னை), நிகோலஸ் பூரன் 16 கோடி(லக்னோ), ஹாரி புரூக் 13.25 கோடி (ஹைதராபாத்), மயங்க் அகர்வால் 8.25 கோடி (ஹைதராபாத்), ஷிவம் மாவி 6 கோடி (குஜராத்) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அனைவரும் அதிக விலைக்கு போவார் என நினைத்திருந்த தமிழக வீரர் ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

சில வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அதிக விலைக்கு போனார்கள் ஆனால் சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் சிலர் அடிப்படை விலைக்கே ஏலம் போனார்கள், சிலர் ஏலம் போகாமல் இருந்தனர்.

அடிப்படை விலைக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஜோரூட், அடில் ரசித், கை ஜாமிசன், ரஹானே, ஷகில் அல் ஹசன், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடிப்படை விலைக்கே ஏலம் போனார்கள்.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகாத மிக முக்கிய வீரர்கள் விவரம்:-

இந்திய வீரர்கள்:- வருண் ஆரோன், சந்தீப் ஷர்மா, சஞ்சய் யாதவ், பிரியங் பாஞ்சல், ஸ்ரேயஸ் கோபால், அபிமன்யு ஈஸ்வரன், தினேஷ் பானா, சவுரப் குமார், ஜெகதீசா சுதீப், பாபா இந்திரஜித், பிரியம் கார்க், திரிலோக் நாக்.

வெளிநாட்டு வீரர்கள்:- டாம் பாண்டென், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டிராவிஸ் ஹெட், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜிம்மி நீஷம், கிறிஸ் லின், டைமல் மில்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், நாதன் குல்டர் நைல், முஜீப் உர் ரஹ்மான், டேரில் மிட்செல், முகமது நபி, டாம் லதாம், மேட் ஹென்றி, இஷ் சோதி, டாம் கர்ரன், கார்லஸ் பிராத்வெய்ட், தசுன் ஷனகா, துஷ்மந்தா சமீரா, பாபியென் ஆலன், கீமோ பால்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!