இப்படியும் நேசிக்க முடியுமா..? 9 வயதில் ஆரம்பமான Lionel Messi யின் காதல் கதை!

லியோனல் மெஸ்ஸி கால்பந்து போட்டியின் சாம்பியன். GOAT (greatest all the times) என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். ஃபுட்பாலை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறாரோ அதே அளவுக்கு தன்னுடைய மனைவி அன்டோனெலா ரோக்குசோவையும் நேசிக்கிறார்.

இவர்களுடைய காதல் கதையே மற்ற காதலில் இருந்து வேறுபட்டது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் இப்படியும் நேசிக்க முடியுமா என்கிற அளவுக்கு உறுதியான காதல். அந்த காதல் கதையை நாமும் தெரிஞ்சிக்க வேண்டாமா?…

மெஸ்ஸி தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை, கடந்த 20 ஆண்டுகளை ஃபுட்பாலுடன் தான் கழித்திருக்கிறார். அதே 20 வருடங்கள் தன்னுடைய காதலியான அன்டோனெலா ரோக்குசோவுடனும் பயணித்திருக்கிறார்.

தங்களுடைய பால்ய காலத்தில் காதல்னா என்னனு தெரியாத போதிருந்தே இருவரும் காதலிகக் தொடங்கியவர்கள். அந்த சுவாரஸ்யமான காதல் கதையை பற்றி நாமும் பார்க்கலாம் வாங்க.

​முதல் சந்திப்பு

மெஸ்ஸி தன்னுடைய பள்ளிப் பருவத்தில் கோடைகால விடுமுறையின் போது தன்னுடைய நண்பன் லூகாஸ் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது தன் நண்பனின் வீட்டில் தான் தன்னுடைய வருங்கால மனைவியை முதன் முதலில் மெஸ்ஸி சந்தித்தார்.

அப்போது மெஸ்ஸிக்கு வயது 8-9 இருக்குமாம். தன் நண்பனின் உறவுக்கார பெண் தான் அன்டோனெலா. மெஸ்ஸி அங்கு இருந்தபோது அவ்வப்போது வந் உங்களுக்கு என்ன வேண்டுமா? ஏதாவது வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்பாராம். அப்படி தான் மெஸ்ஸிக்கு அன்டோனெலாவை பிடிக்க ஆரம்பித்ததாம்.

​திடீர் பிரிவை சந்தித்த மெஸ்ஸி – அன்டோனெலா ஜோடி

பள்ளிப் பருவத்தில் தன் நண்பனின் மூலம் தொடங்கி ய பழக்கம் இவர்களுக்குள் நெருங்கிய நட்பாக மாறத் தொடங்கியது.

பல வருடங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத சூழல் உருவானது. மெஸ்ஸியின் அப்பா ஜார்ஜ் மெஸ்ஸி குடும்பத்தோடு பார்சிலோனாவுக்கு 2000 ஆம் ஆண்டில் குடிபெயர்ந்து விட்டார்கள். அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாமல் தவித்தார்கள்.

​ஹார்மோன் குறைபாடு

மெஸ்ஸிக்கு 11 வயதாக இருக்கும்போது திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. அந்த சமயத்தில் தான் மெஸ்ஸியின் தந்தை தன்னுடைய மகனை எப்படியாவது மிகப்பெரிய கால்பந்து வீரராக்கி விட வேண்டும் என்று நினைத்து அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்த சமயம் அது.

மெஸ்ஸிக்கு உடல் நிலையும் சரியில்லாமல் போனதால், மருத்துவ சிகிச்சைக்காகவும் மெஸ்ஸியின் கால்பந்தாட்ட எதிர்காலத்துக்காகவும் பார்சிலோனாவுக்கு அவருடைய அப்பா கூட்டிக் கொண்டு போனார்.

​தொழில் ரீதியாக வளர்ச்சி

மெஸ்ஸியின் 12வது வயதில் 14 வயதிற்குட்டோர் கால்பந்தாட்ட போட்டிக்காக எஃப்சி பார்சிலோனா பிரிவு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது. அதையடுத்து பயிற்சிக்காகவும் மெஸ்ஸி பிரான்ஸ்க்கு சென்று விட்டார்.

இருவரும் மீண்டும் சந்திப்பதற்கு இடையிலான இந்த காலகட்டத்தில் அன்டோனெலாவும் பள்ளிப் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு, பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய துறையில் வளர்ந்து கொண்டே போனாலும் இருவருடைய நியாபகமும் தங்களுடைய நட்பை சுற்றியே இருந்தது.

​சோகத்தில் துணையாக இருந்த மெஸ்ஸி

கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் தனித்தனியே வளர்ந்தனர். 2005 ஆம் ஆண்டு அன்டோனெலாவின் தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார். அப்போது அன்டோனெலாவுக்கு வயது 17. அன்டோனெலாவின் தந்தை இறந்து சில மாதங்கள் வரை மெஸ்ஸி இந்த தகவல் தெரியாது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடனே தான் பார்சிலோனாவில் இருக்க மாட்டேன், அன்டோனெலாவுடன் துணையாக இருக்கப் போகிறேன் என்று சொல்லி அர்ஜென்டைணாவுக்கு பறந்து வந்துவிட்டார்.

​காதலை வெளிப்படுத்திய தருணம்

அன்டோனெலா – மெஸ்ஸிக்கு இடையே இருந்த ஆழமான காதல் பற்றி அவர்கள் வெளியில் சொல்லிக் கொள்ளவே இல்லை. கிட்டதட்ட 2007 ஆம் ஆண்டு வாக்கில் அன்டோனெலாவின் தோழி தான்மு முதன்முதலில் இவர்களுடைய காதல் குறித்து வெளியில் சொன்னார்.

அதையடுத்து 2009 ஆம் ஆண்டு மெஸ்ஸியிடன் ஒரு பேட்டியின் போது, உங்களுடைய காதல் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து சொல்லுங்கள் என்று கேட்டபோது தான் எனக்கானவள் அர்ஜென்டைனாவில் இருக்கிறாள் என்று வெளிப்படையாக மெஸ்ஸி சொன்னார்.

​குழந்தைகளும் திருமணமும்

கடந்த 2017 ஆம் ஆண்டு மெஸ்ஸிக்கும் அன்டோனெலாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுடைய திருணமத்தில் ஏராளமான ஃபுட்பால் ஸ்டார்ஸ் கலந்து கொண்டனர்.

ஆனால் இருவரும் ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். திருமணத்துக்கு முன்பாகவே மெஸ்ஸி – அன்டோனெலா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

2012 ஆம் ஆண்டு அன்டோனெலா கர்ப்பமாக இருப்பதாக மெஸ்ஸி வெளிப்படையாக அறிவித்தார். 2012 நவம்பரில் முதல் குழந்தை பிறந்தது. அடுத்து 2015 ஆம் ஆண்டில் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றார் அன்டோனெலா. திருமணத்துக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் மூன்றாவதான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

மெஸ்ஸியின் காதலும் குடும்பமும் அழகானது. தான் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை கால்பந்துக்காக செலவிட்டதால் தன்னுடைய ஓய்வுக்கு பிறகு, தன் முழு நேரத்தையும் காதல் மனைவி அன்டோனெலாவுக்கும் தன் மூன்று குழந்தைகளுக்கும் செலவிடப் போவதாக மெஸ்ஸி திட்டமிட்டிருக்கிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!