பனி காலங்களில் வரும் உடல் வலிகளும்… காரணங்களும்… தீர்வும்!

மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை. இந்த காலங்களில் பலவிதமான வெளி நிகழ்வுகளில் பங்கேற்பதும், மழை சாரலில் லேசாக உடல் நனைவதில் ஏற்படும் சுகமான அனுபவங்களும், கிறிஸ்மஸ், நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக வெளியிடங்களுக்கு, குறிப்பாக திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்பதெல்லாம் மனதிற்கு குதூகலம் மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய ஒன்றுதான்.

இருந்தாலும் பல பேர் உடல் வலி, மூட்டு வலிகள், தசை பிடிப்பு, தசைகள் இறுகியது போன்ற உணர்வு, நரம்பு வலிகள் போன்றவற்றில் அவதிப்படுவதும் பெருமளவில் இந்த காலங்களில் தான். இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

குளிர்காலங்களில் 1. உடலுக்கு தேவையான சூடு குறைவதால், 2. தசைகள் இறுகுவதால் 3. ரத்த ஓட்டத்தில் வேகம் குறைவதால், 4. உடலில் நீர் பிடிப்பு குறைவதால் மற்றும் 5. காற்றின் அழுத்தம் குறைவதால் போன்ற பல காரணங்களினால் வலிகள் ஏற்படுகின்றன.

குளிர்கால உடல் வலிகளின் அறிகுறிகள் என்னென்ன

* உடலின் மூட்டுகளில் வலி இடுப்பிலிருந்து குதிகால் வரையில் பரவும் அதீத வலி

* உடலின் தசைகள் திடீரென்று சுளுக்கு போல் பிடித்துக் கொள்ளுதல் * விரல்களின் மூட்டுக்கள் இறுகி வேலை செய்வதில் சிரமம் ஏற்படுத்துதல்

* தசைகளில் வலி அவ்வப்போது குறுகிய காலத்திற்கு விட்டு விட்டு வந்து போதல் போன்றவை எல்லாம் இந்த குளிர் பனி காலங்களில் ஏற்படக்கூடியது சகஜமே.

குளிர்காலம் ஏன் தசைகளையும் மூட்டுகளையும் பாதிக்கிறது

பொதுவாக குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் இதயம் நுரையீரல் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக அளவில் செல்வதை உடல், உறுதி செய்து கொள்கிறது.

இந்த நேரங்களில் கை கால்களுக்கு ரத்த ஓட்டத்தில் லேசான தடை ஏற்படலாம். இதனால் அந்த பகுதிகளுக்கு வெப்பம் செலுத்தப்படுவதும் குறைகிறது. இதனால் உடலில் ஒரு வித இறுக்கம் ஏற்பட்டு கை கால்களின் நுனிகள் குறிப்பாக விரல்கள் வலிக்க துவங்குகிறது. பொதுவாக குளிர்காலங்களில் குளிர்சசியினால் காற்றின் வெப்பம் குறைகிறது.

இதனால் காற்றின் அடர்த்தி அதிகம் ஆகிறது. இதனால் பேரோமெட்ரிக் ஏர் பிரஷர் என்று அழைக்கப்படும் காற்றின் அழுத்தம் குறைகிறது. இந்த காற்றின் குறைந்த அழுத்தம் நம் உடலின் மூட்டுகளை சுற்றியுள்ள மென் திசுக்களை விரிவடைய செய்கிறது.

இதனால் மூட்டுகளின் அசைவுகள் குறைக்கப்பட்டு நமக்கு வலி தோன்றுகிறது. மூட்டுக்கள் மட்டுமின்றி மூட்டு தசைகள் உள்ள பகுதி முழுவதுமே நமக்கு வலிக்கிறது.

இந்த தசைகள் மற்றும் மூட்டுகள் குளிர் காற்றினால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன

தசைகளில் மற்றும் மூட்டுகளில் இறுக்கம், குறிப்பாக காலையில் எழும்பொழுது, உடல் சோர்வு, உடல்களில் வீக்கமும் சிவப்புத் தன்மையும் ஏற்படுவது, நடப்பதில் சிரமம், அசைவுகளில் சிரமம், பசியின்மை, வேலை செய்ய பிடிக்காமல் சோம்பல் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

குளிர்கால உடல்வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி குளிர்காலங்களில் நாம் சில விஷயங்களை விழிப்போடு கடைப்பிடிப்போமானால் இந்த மூட்டு தசை வலிகளில் இருந்து நம்மை பெரிதளவும் நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு என்னென்ன செய்யலாம் என்பது கீழ் வருமாறுமிதமான உடற்பயிற்சியை தினமும் செய்வது

* அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்ப்பது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் உடலுக்கு ஒரு அசைவை கொடுத்து விட்டு அமர வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்து விட்டு வந்து அமர வேண்டும்.

* போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்

* வலியுள்ள பகுதிகளை சற்றே உயர்த்தி வைத்திருப்பதும் வலியை குறைக்க உதவும் * மூட்டுக்கள் மற்றும் தசைகளை லேசாக மசாஜ் செய்வது. கடுகு எண்ணெய் பூண்டு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யும் பொழுது அந்த தசைகளுக்கு சூடும் கிடைக்கும் ரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படும்

* கால் கை மூட்டுகளில் வீக்கம் இருக்குமானால் அந்த இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்

* வீக்கம் இல்லாத நரம்பு வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் மிகுந்த பயனை கொடுக்கும் * தினசரி குளிக்கும் பொழுது இளம் சூடான நீரில் குளிப்பது நல்லது அதிக குளிர்ச்சியான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்’

* மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் குறைவாக இருந்தாலும் அவ்வப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வருவது உடலில் சூட்டை சமன்படுத்த உதவும்.

* வலி நிவாரணியாக மருந்து எடுத்துக் கொள்வது மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே இருக்க வேண்டும். மிதமான வலிகளுக்கு முடிந்தவரை வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து மருந்துகளை தேர்ந்தெடுத்து எடுத்துக் கொள்ளலாம்.

* மாற்று மருத்து வலி நிவாரண மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்

* அக்குபஞ்சர், யோகாசனம் போன்றவையும் குளிர்கால வலிகளை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் உதவும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!