இந்த தவறுகளை பழங்களை சாப்பிடும் போது செய்யாதீங்க.!

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை இதற்கு உண்டு. பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், பிற கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது.

சிலர் இதனை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர். இதனால் பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர். இதனை மாற்றி கொண்டால் பழங்களில் இருந்து ஆரோக்கியமான முறையில் நன்மையினை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும். ஏனெனில் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கும்

பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும்.

பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிறவாறான பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறையும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!