ஈரானில் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்!

ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 23 வயதான மொஹ்சென் ஷெகாரி மற்றும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட் ஆகியோருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் போராட்ட வழக்கில் சிக்கிய ஒரு மருத்துவர், ராப் இசை கலைஞர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் உட்பட இருபது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பவும், நாடு தழுவிய போராட்டங்களை கட்டுப்படுத்தவும் ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக ஈரான் மனித உரிமை குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி குற்றம் சாட்டியுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!