செல்போனுக்கு இனி உங்க உடலே சார்ஜராக மாறப்போகிறதாம்… எப்படி தெரியுமா..?


உங்கள் உடல் அசைவுகள் மூலமே சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எவ்வளவு லேட்டஸ்ட் போன் வந்தாலும் சார்ஜ் பிரச்சனை மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது. பெரிய செல்போன்களுக்கு இந்த நிலை என்றால், கையில் அணியக் கூடிய சிறிய ரக ஸ்மார்ட் போன்கள், ஸ்மாா்ட் வாட்ச்களில் இது பெரும் சவாலாகவே உள்ளது.

இதனை சரி செய்ய அமெரிக்காவின் பஃபெல்லோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

“ட்ரிபோ எலக்ட்ரிக் சார்ஜிங்” எனும் முறையைப் பயண்படுத்தி நம் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசைவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தில் இரண்டு தங்க தகடுகள், சில்லிக்கான் மூலாம் பூசப்பட்ட வைக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்றோடு ஒன்று உரசி, அசைவு ஏற்படும் போது சக்தி உண்டாகும், அதன்மூலம் சார்ஜ் ஏறும்.


நம் உடலில் இந்த தகடை அணிந்திருந்தால், நாம் கைகளை அசைத்தாலோ, ஏன் விரல்களை அசைத்தாலோ அது மின் சக்தியாக மாறும்.

தற்போது இதன்மூலம் சிறிய அளவிலான மின் சக்தியே கிடைக்கிறது. வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இது குறித்து விஞ்ஞானி ஒருவர் பேசுகையில், “மனித உடலை அளவற்ற சக்தி கொண்டது. அதை வைத்து நாம் ஏன் நமக்குத் தேவையான மின் சக்தியை நாமே தயாரிக்கக் கூடாது என்று தோன்றியது. அதன் விளைவாகவே இதனைக் கண்டுபிடித்துள்ளோம்” என்றார்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியை சேமிக்க சிறிய ரக பேட்டரிகளையும் தயாரித்து வருகிறார்கள்.

விரைவில் உங்கள் உடலே உங்கள் செல்போனுக்கு சார்ஜராக மாறப்போகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!