எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில் விமர்சித்த பாடகர் கன்யே வெஸ்ட்!

அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்டின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கன்யே வெஸ்டின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அவரது கணக்கை இடைநீக்கம் செய்துள்ளார். ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர்.

அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க் – கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில், டுவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எலான் மஸ்க்கை விமர்சித்தும் மஸ்க்கை உருவக்கேலி செய்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பாடகர் கன்யே வெஸ்ட்.

“எலான் ‘பாதி சீனராக’ இருக்க முடியும் என்று நான் மட்டும் நினைக்கிறேனா? அவருடைய சிறுவயது படங்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சீன மேதையை அழைத்துச் சென்று தென்னாப்பிரிக்க சூப்பர் மாடலுடன் இணைத்துக்கொண்டால் எலான் மஸ்க் கிடைப்பார்.

அவர்கள் அநேகமாக 10 முதல் 30 எலான்களை உருவாக்கியிருக்கலாம், அதில் இவர் தான் முதல் மரபணு கலப்பினமாகும். அதேவேளையில், ஒபாமாவை நாம் மறந்து விடக்கூடாது.தேவாலயத்தில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்”. இவ்வாறு தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!