பட்டத்து அரசன் திரைவிமர்சனம்!

ஒரு கிராமத்தில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண் (பொத்தாரி). அவருக்கு இரண்டு மனைவி. இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனின் மகனாக அதர்வா (சின்னதுரை) வருகிறார்.

ஊரில் பெரிய கபடி விளையாட்டு வீரான ராஜ் கிரணுக்கு அந்த ஊர் கிராமம் சிலை வைத்து வழிபாடு செய்யும் அளவிற்கு மரியாதையான நபராக இருக்கிறார். இதனிடையே குடும்பத்தில் ஏற்படும் சின்ன பிரச்சனையால் இரண்டாவது மனைவியின் வாரிசுகள் பிரிந்து சென்று விடுகின்றனர்.

எப்படியாவது குடும்பத்தை ஒன்றிணைக்க அதர்வா போராடி வருகிறார். ராஜ் கிரண் மீது அளவுக்கு அதிக அன்பை வைத்திருக்கும் கிராமம், சிறிய பிரச்சனையால் அவர் பெயரில் இருக்கும் கபடி குழுவை கலைத்துவிட முடிவெடுத்து விடுகிறது.

இதனை நிருபிப்பதற்காக அதர்வா போராடியும் முடியாமல், ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் இருப்பவர்களை வைத்து ஒரு கபடி குழுவை ஒன்றிணைக்கிறார். இந்த குடும்ப கபடி குழுவை வென்றால் நாங்கள் செய்தது தவறு என்றும் ஒரு வேளை நீங்கள் தோல்வி அடைந்தால் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முடிவெடுக்கபடுகிறது.

இறுதியில் இந்த போட்டியில் வென்றது யார்? தங்கள் மீதுள்ள கரையை துடைத்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் அதர்வா. அவருக்கு கொடுக்கப்பட்டு பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் குடும்ப பாச காட்சிகளிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

கதாநாயகியாக வரும் ஆஷிகா ரங்கநாத் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். கபடி வீரர், குடும்பத் தலைவர் என பல பரிணாமங்களில் ராஜ் கிரண் கலக்கி இருக்கிறார். கபடி விளையாடும் இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார். ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி, பால சரவணன் என படத்தில் நடித்த பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

குடும்ப உணர்வுகளை ஆக்‌ஷன் கலந்த திரைக்கதையாக வடிவமைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். பாச உறவு, அன்பு என அனைத்தையும் அதிகமாக கொடுத்து விறுவிறுப்பில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.

குடும்பத்தை இணைத்து போட்டியில் கலந்துக் கொள்ள முயற்சிப்பது பார்வையாளர்களின் மனநிலையை சோதிக்கும்படி இருக்கிறது. பார்த்த பெண்னை திடீரென திருமணம் செய்துக் கொண்டு அவரையும் கபடி குழுவில் இணைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் ரசிகர்களை அலுப்படைய செய்கிறது.

இயக்குனர் சற்குணத்தின் முந்தைய படங்களில் இருந்து சற்று விலகி பட்டத்து அரசன் தென்படுகிறது. இயக்குனர் நினைத்த விஷயங்களை பார்வையாளர்களுக்கு கடத்த முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லோகனாதன். ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே. மொத்ததில் பட்டத்து அரசன் – முடிசூடவில்லை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!