நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது.
இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது.
புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என நாசா விளக்கி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!