கை கழுவ தொட்டி… டுவிட்டரில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

டுவிட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார் எலான் மஸ்க்.

டுவிட்டர் நிறுவனத்தை, 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க உள்ளார் எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். பின்னர் சில வாரங்களிலேயே அம்முடிவில் இருந்து பின் வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.எலன் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இதன்மூலம், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “அதை முழுமையாக புரிந்து கொள்ளட்டும்” என்று ‘சிங்க்’ மூலம் பதிவிட்டுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!