ரஷிய ராப் பாடகர் மாடியில் இருந்து குதித்து விபரீதமுடிவு… அதிர வைத்த காரணம்!

ராணுவத்தில் சேர ரஷிய ஆண்களுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சண்டையிட சுமார் 3 லட்சம் ரஷியர்களை அணிதிரட்ட அந்த நாட்டின் அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

போரில் பங்கேற்க யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என ரஷிய ராணுவம் கூறிய நிலையில், அதற்கு மாறாக ராணுவத்தில் சேர ரஷிய ஆண்களுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் போரில் பங்கேற்க வற்புறுத்தியதால் ரஷிய ராப் பாடகர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவான் விட்டலிவிச் பெடுனின் என்கிற 27 வயதான ராப் பாடகர் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இதனால் அவரை உக்ரைனில் போரில் இணைக்க ரஷிய ராணுவம் அழுத்தம் கொடுத்துள்ளது. அவர் தனக்கு மனநல பிரச்சினை இருப்பதாக கூறி ராணுவத்தின் அழைப்பை நிராகரிக்க முயற்சித்தார்.

ஆனால் ராணுவம் அதை மறுத்துவிட்டது. இதனால் விரக்தியடைந்த அவர் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்.

கொலை பாவத்தை என் ஆன்மா மீது சுமக்க முடியாது, நான் விரும்பவில்லை. எந்த லட்சியத்துக்காகவும் கொலை செய்ய நான் தயாராக இல்லை” என கூறியிருந்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!