‘பொன்னியின் செல்வன்’ 3 நாட்களில் செய்த சாதனை!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2ஆவது நாள் வசூல், 70 கோடி ரூபாயை கடந்ததாக கூறப்படுகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!