தோழிகளின் குளியல் காட்சிகளை அனுப்பி டாக்டரை குஷிப்படுத்திய மாணவி!

விடுதியில் தங்கிய தோழிகளின் குளியல், உடை மாற்றும் காட்சிகளை மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுத்து, தன் டாக்டர் நண்பருக்கு அனுப்பி, அவரை குஷிப்படுத்திய மாணவியை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் 31; எம்.பி.பி.எஸ்., படித்த இவர், கமுதி, முஸ்லிம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது.இவருக்கும், கிளினிக் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி, 24, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது மதுரை, அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, ஒரு கல்லுாரியில் பி.எட்., படித்து வருகிறார்.

டாக்டர் ஆசிக்குடன் இவருக்கு பல ஆண்டுகளாக, ‘நட்பு’ இருக்கும் நிலையில், தன் விடுதியில் தங்கியுள்ள சக பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோ எடுத்து அனுப்பி, டாக்டர் நண்பரை குஷிப்படுத்தியுள்ளார்.

இவர் ரகசியமாக போட்டோ, வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புவதை பார்த்த விடுதி பெண் ஒருவர், காப்பாளரிடம் புகார் அளித்தார். அவர், காளீஸ்வரி மொபைல் போனை சோதித்தபோது, ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ‘சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அந்த பெண், கமுதி டாக்டர் ஆசிக்கிற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, டாக்டர் மற்றும் மாணவியை போலீசார் கைது செய்தனர். இவ்விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!