கப்பலில் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்… கட்டியணைத்து முத்தம் கொடுத்து கலங்கிய விக்கி!

தனது பிறந்தநாளுக்கு காதல் மனைவி நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸால் நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன் நயன்தாராவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

தனது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை ஷேர் செய்து நெகிழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

7 ஆண்டு காதல்

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் நட்சத்திர பட்டாளங்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஹனிமூன் கொண்டாட்டம்

இதனை தொடர்ந்து தாய்லாந்தில் முதல் ஹனிமூனை முடித்த விக்கியும் நயனும் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் சென்றனர். ஸ்பெயின் நகர வீதிகளில் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர். அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து ட்ரெண்ட்டானது.

துபாயில் பிறந்தநாள்

இதனை தொடர்ந்து ஸ்பெயினில் இருந்து துபாய் சென்றனர் புதுமண தம்பதிகள். கடந்த 18 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடினார் நயன்தாரா. உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிஃபா அருகே இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்த விக்கி, தனது அன்புக்குரியவர்களை அழைத்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாராவை புகழ்ந்திருந்தார்.

உருகும் விக்கி

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கப்பலில் விக்னேஷ் சிவனின் அம்மா தங்கை என குடும்பத்தினர் சூழ நள்ளிரவில் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விக்கிக்கு தெரியாமல் அவரது குடும்பத்தினரை சர்ப்ரைஸாக அழைத்து வந்த நயன்தாரா, மகிழ்ச்சியுடன் தனது காதல் கணவரின் பிறந்த நாளை ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.

கட்டியணைத்து முத்தம்

மனைவி கொடுத்த சர்ப்ரைஸால் நெகிழ்ந்துப் போன விக்னேஷ் சிவன், அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், உன்னுடன் இது எனது 8வது பிறந்தநாள், என் தங்கமே #nayanthara. ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்தநாளைக் காட்டிலும் சிறப்பானதாக மாற்றி வருகிறாய்! ஆனால் ….இது மிகவும் எமோஷனலானது..!

என் காதலியாக இருப்பதற்கு…

நீ என் காதலியாக இருப்பதற்கு நன்றி! என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்வது எது என்று உனக்குத் தெரியும், அதை நீ எனக்குக் கொடுத்தாய்! 🙂 இன்னும் பல ஆண்டுகள் அன்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் வாழ வேண்டும்! நன்றி நீ என்னை நேசிப்பது போலவே நான் உன்னை நேசிக்கிறேன்… இவ்வாறு விக்னேஷ் சிவன் உருகியுள்ளார். விக்கியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!