“நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” – ரசிகர்களுடன் உரையாடிய அஜித்!

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் தனது பிஎம்டபில்யூ பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது.

தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், “உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்..” என்று கூற, உடனே அஜித், “தேடிட்டு இருக்கிங்களா… நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா” என்று சிரித்தபடி கேட்டார்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்… உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!