அமெரிக்காவில் உலகின் முதல் பறக்கும் பைக் அறிமுகம் – விலை எவ்வளவு..?

40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் பறக்கும் பைக்கான ஹோவர் பைக் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.

ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் பைக் 300 கிலோ எடை கொண்டது. பைக்கின் முன்னும் பின்னும் 2 பெரிய பேன்களும் 4 புறத்திலும் சிறிய பேன்களும் உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட இந்த பைக்கில் 4 பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.

இது மணிக்கு 62 மைல் வேகத்தை எட்டும் எனவும் இதன் விலை 7,77,000 டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் டாலர் விலையில் இதே போன்ற அம்சங்கள் கொண்ட பறக்கும் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏர்வின்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது?

உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

சாலையில் போக்குவரத்து நெரிசலா இனி கவலை வேண்டாம்… சும்மா சர்ர்ரென பறந்து போய் விடலாம் என்பது போல உலகின் முதல் பறக்கும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடம் வரை பறக்கும் திறனும், மணிக்கு 99 புள்ளி 77 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறனும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்கெனவே இந்த பைக்கின் விற்பனை தொடங்கி விட்டதாகவும், இந்த பைக்கின் சிறிய வெர்சன், 2023-ம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.-News & image Credit: thinaboomi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!