பொதுவாக ஆண்கள் பெண்களின் புற அழகை மட்டும்தான் ரசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தவறான கருத்து. அவர்கள் பெண்களின் நடை, உடை, பாவனை, சிரிப்பு, பார்வை, சைகை, கூந்தல் அழகு, மற்றவர்களிடம் பழகும் விதம் இப்படி பலவற்றையும் ரசிக்கிறார்களாம். இந்த பதிவில் ஆண்கள் பெண்களிடம் ரசிக்கும் சிலவற்றை பார்ப்போம்.
நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்துத்தான் அவரிடம் நெருங்கலாமா, வேண்டாமா என்று முதலில் முடிவு செய்கிறோம். அதுபோலத்தான் ஆண்கள் உங்கள் முக பாவத்தைப் பார்த்து உங்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். உங்கள் முகம் பொலிவாக ஒரு புன்னகை பூத்தாற்போல தோன்றினால் அவர்கள் தொடர்வார்கள். உங்களுக்கு அவரிடத்தில் தொடர்ந்து பழக ஏதோ ஒன்று பிடித்திருக்கிறது என்று கருதி, பேச துவங்குவார்.
உங்கள் தனித்தன்மை என்ன, நீங்கள் எப்படி ஒரு இடத்தில் தனியாகத் தெரிகிறீர்கள் என்பதில் இருந்து ஆரம்பித்து, ஒரு விஷயத்தை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்; மற்றவர்களிடம் எப்படி பழகுகிறீர்கள்; இப்படி உங்கள் குணத்தை ஆராயா ஆரம்பிப்பார்கள்.
உங்களுக்கென தனி உலகம் இருக்கிறதா, நீங்கள் பொதுவாக எவ்வளவு உற்சாகமான நபர் என்பதையும் கவனிப்பார். கண்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசிவிடும் என்பார்கள். ஒரு ஆண் முதலில் உங்கள் கண்ணைத்தான் கவனிப்பார். கண்கள் உங்கள் உணர்வுகளை உடனே பிரதிபலிக்ககூடியது. அது பொய் சொல்லாது. உடலில் வேறு எந்த பாகத்தையும்விட காண்களின் ஈர்ப்பு மிகவும் அதிகம். இதையும் படியுங்கள்: பெண்களின் புத்தகம் படிக்கும்போது உட்காரும் முறைகள் உங்கள் நகங்களை நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு உங்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டவராக இருக்கிறீர்கள் என்று உங்கள் அவர் எடை போடுவார்.
அழகிய நகங்கள், உங்கள் அக்கறையை வெளிப்படுத்தும். கூந்தல் அடர்த்தியாக கருமையாக, நீளமாக இருந்தால்தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்றில்லை. பொதுவாக உங்கள் முக அமைப்பிற்குத் தகுந்தவாறு உங்கள் கூந்தலை ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பெரிய முக அமைப்பு இருந்தால், கூந்தலை விரித்து நயன்தாரா போல ஒரு வேவி ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ளுங்கள். சின்ன முகமாக இருந்தால், கூந்தலை வைத்து மறைக்காமல் உங்கள் முக பாவம் தெரியுமாறு கூந்தலை படிய வாரி அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோவக்கார பெண்ணா? நம்பிக்கை இல்லாமல் முகத்தில் எப்போதும் ஒரு இருக்கத்தை வைத்துக்கொண்டிருப்பவரா? உங்கள் பக்கத்தில் எந்த ஆணும் நெருங்க மாட்டார்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் இந்த யுக்தியை கையாளலாம். வாழ்க்கையை சந்தோசமாக எதிர்கொள்கிறீர்களா என்றும் கவனிப்பார்.
ஆண்கள் மிக கூர்ந்து நீங்கள் எப்படிப்பட்ட உடை அணிந்திருக்கிறீர்கள், எவ்வாறு அதைக் கையாளுகிறீர்கள் என்று கவனிப்பார்கள். உங்கள் உடையின் நிறம், டிசைன், அதை நீங்கள் எவ்வளவு பொருத்தமாக உடுத்துகிறீர்கள் என்பதிலிருந்துகூட உங்களை எடை போடுவார்கள்.
ஒரு சிலர் யோகா பாண்ட், ஹை ஹீல்ஸ், லெக்கிங்ஸ் அணிந்திருக்கும் பெண்கள் என்றால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். எந்த உடையாக இருந்தாலும், அதை நம் உடல் வாகிற்கு ஏற்றதாக தேர்ந்தெடுத்து, அழகாக கையாண்டால், அனைவர்க்கும் பிடிக்கும்.
இது நீங்கள் அவர் அருகில் செல்வதற்கு முன்பே உங்களை காட்டிக்கொடுத்துவிடும். உங்களுக்கென்று ஒரு ஸ்பெஷல் வாசனை இருப்பதை விரும்புவார்கள் ஆண்கள்.
நீங்கள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகுறீர்களா? என்பதையும் கவனிப்பார். பொதுவாக ஆண்களுக்கு எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக, ஸ்டேட்டஸ் மறந்து பழகும் பெண்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு விஷயத்திலும், ஆண்கள் சொல்வதை பின்பற்றாது, ஆண்களிடம் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்களை சேலஞ் செய்யும் பெண்களை தான் ஆண்கள் விரும்புவார்கள்.
மேலும், அப்படிப்பட்ட பெண்களைத்தான் ஆண்கள் அவர்களுக்கு சமமாக கருதுவார்கள். இயற்கையாகவே, பெண்ணுக்கு ஒரு ஆணைப்பிடித்துவிட்டால், அவருடைய கூந்தல் முதல் பாதம் வரை, அந்த ஆணை ஈர்க்கும் பண்பு தானாக வந்து விடும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!